தடை நீக்கப்பட வேண்டும்...

Sunday, 20 January 2019 - 13:38

%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D...
இந்திய கிரிக்கட் ஆட்டக்காரர்களான ஹாடிக் பாண்டியா மற்றும் கே.எல். ராஹூல் ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை குறித்து இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் பதில் தலைவர் சி.கே. கன்னா கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர்களுக்கு எதிரான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், அவர்களுக்கு எதிரான தடை நீக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்துடன் இடம்பெறும் இந்தியாவுடனான கிரிக்கட் போட்டி அணியில் இவர்கள் இருவரும் இணைவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்வொன்றில் இவர்கள் அசாதாரண கருத்தினை வெளிப்படுத்தினர் என தெரிவித்து இந்த தடை விதிக்கப்பட்டது.

இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் விதிமுறைகளுக்கு அமையவே இந்த தடை விதிக்கப்பட்டதாக முன்னர் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்திருந்தது.

இந்த விடயம் குறித்து ஆராய இந்திய உயர் நீதிமன்றம் குறைகேட்கும் குழுவொன்றை நியமித்துள்ளது.

இந்த குழுவினர் அடுத்த வாரம் இது குறித்த விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.


இதேவேளை, இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் அப்போது இடம்பெற்று வந்த போட்டி தொடரில் இருந்து விலக்கப்பட்டு மீள தயாகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
 
இது தவிர, இந்த இருவரும் தமது தவறினை ஏற்றுக்கொண்டதுடன் மன்னிப்பும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.