ஆப்கானில் 18 பேர் பலி

Monday, 21 January 2019 - 20:50

%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+18+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
ஆப்கானிஸ்தானில், தாலிபான்களினால் மேற்கொள்ளப்பட்ட மகிழூந்து குண்டு தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானின் மைடான் வர்தாக் மாகாணத்தில் உள்ள பயங்கரவாத ஒழிப்பு இராணுவ விசேட அலுவலகத்தை குறிவைத்தே இந்த கார் குண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் மேலும் 30 பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் மைடான் வர்தாக் மாகாணத்தில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டு வரும் ராணுவம் மற்றும் காவற்துறை கொண்ட சிறப்புப்படை அலுவலகம் இயங்கி வருகிறது.

குண்டு வெடித்ததன் பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சமர் இடம்பெற்றுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாலிபான் ஆயுததாரிகள் இருவரும் இந்த தாக்குதலின் போது பலியாகினர்.

காயமடைந்த பாதுகாப்பு படைத்தரப்பினரில் பலரது நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதனால், உயிர் சேதங்கள் மேலும் அதிகரிக்கலாம் என மருத்துவ தரப்பினர் கவலை வெளியிட்டுள்ளனர்.