சிம்பாப்வேயில் தீவிரமடைந்துள்ள போராட்டம் - பலர் பலி

Wednesday, 23 January 2019 - 8:01

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
சிம்பாப்வேயில் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்தில் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இதன்காரணமாக சுவிர்ஸ்சிலாந்தின் டாவோஸுக்கான பயணத்தை அந்த நாட்டு ஜனாதிபதி எம்மர்சன் உடனடியாக ரத்து செய்து நாடு திரும்பினார்.

சிம்பாப்பேயில் கடந்த வாரம் பெட்ரோல் மற்றும் டீசல் என்பவற்றின் விலையை கணிசமான அளவு அந்தநாட்டு அரசங்கம் அதிகரித்தது.

இதனை எதிர்த்து எதிர்க்கட்சியினர், வர்த்தக சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

குறிப்பாக தலைநகர் பகுதியில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினரும், காவல்துறையினரும் தீவிர நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், இருதரப்புக்குமிடையே ஏற்பட்ட மோதலில் தாக்குதலுக்கு உள்ளான ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பலர் காயமடைந்த நிலையில், கைதுகளும் இடம்பெற்றுள்ளன.

இந்தநிலையில், பாதுகாப்பு படையினர் வன்முறையில் ஈடுபட்டமை தொடர்பில் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.