ஆயிரம் இயக்கத்தின் போராட்டத்தால் புறக்கோட்டையில் வாகன நெரிசல்
81
Views
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாளாந்த அடிப்படை வேதன அதிகரிப்பை வலியுறுத்தி இடம்பெறும் போராட்டம் காரணமாக புறக்கோட்டை – ஒல்கொட் மாவத்தையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாளாந்த அடிப்படை வேதன அதிகரிப்பை வலியுறுத்தி நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களின் பிரதான போராட்டம் தற்போது கொழும்பில் இடம்பெற்று வருகிறது.
ஒருமீ என்ற சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியமும் ஏனைய சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து ஆயிரம் இயக்கம் என்ற பொது பெயரில் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.
கொழும்பு ஐந்துலாம்பு சந்தியில் ஆரம்பமாகியுள்ள இந்தப் போராட்டத்தில் பெருமளவானோர் பங்கேற்றுள்ளனர் என அங்கிருக்கும் எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.