Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81
Wednesday, 23 January 2019 - 20:10
பாரவூர்தி மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு
114

Views
நிக்கவரெட்டிய – ரஸ்நாயக்கபுர – சிறிசேனவத்தை பகுதியில் பாரவூர்திய ஒன்றின் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

காவல்துறையினரின் கட்டளையை மீறி சட்டவிரோதமாக மணலை ஏற்றிச் சென்ற பாரவூர்தி, காவல்துறை அதிகாரிகளை மோதி தப்பிச் செல்ல முற்பட்ட வேளையே இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த துப்பாக்கி பிரயோகத்தால் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில், பாரவூர்திக்கு சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ளது.

எனினும் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்ற வேளை பாரவூர்தியில் மணல் ஏதும் இருக்கவில்லை என பாரவூர்தியை செலுத்திய அதன் உரிமையாளர் எமது செய்தி பிரிவிடம் தெரிவித்துள்ளார்.

செங்கற்ளை ஏற்றுவதற்காக சென்றிருந்த வேளை அது இல்லாமையால் மீண்டும் திரும்பி கொண்டிருந்த போது, சிவில் உடையில் வந்த காவல்துறை அதிகாரிகள் இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் எமது செய்தி சேவை அப்பகுதிக்கு பொறுப்பான உயர் காவல்துறை அதிகாரியொருவரிடம் வினவியபோது, குறித்த பாரவூர்தியை செலுத்திய நபர் சட்டவிரோத மணல் மோசடியுடன் தொடர்புடையவர் என தெரிவித்துள்ளார்.

எனினும் சம்பவம் தொடர்பில் உதவி காவல்துறை அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் இடம்பெறுவதாக அந்த உயர் அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
196 Views
HiruNews
HiruNews
HiruNews
16,064 Views
HiruNews
HiruNews
HiruNews
10,240 Views
HiruNews
HiruNews
HiruNews
27,919 Views
HiruNews
HiruNews
HiruNews
233 Views
HiruNews
HiruNews
HiruNews
62,933 Views
Top