கிரலாகல தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்த எழுவரும் கைது

Wednesday, 23 January 2019 - 20:48

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
வரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்த தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ஏழு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபி மீது ஏறி பிடிக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரிமாறப்படுவதாக அந்த வலயத்திற்கு பொறுப்பான தொல்பொருள் அதிகாரி ஹொரவபொத்தான காவற்துறையில் நேற்று பிற்பகல் முறைப்பாடு செய்திருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாள் ஒன்றில் கிரலாகல தொல்பொருள் வனப்பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்த சிலர் இந்த புகைப்படங்களில் தோன்றியுள்ளதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கமைய மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்கள் ஏழு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.