உலக பொருளாதாரத்தில் இந்தியாவும், சீனாவும் பாரிய தாக்கம்

Thursday, 24 January 2019 - 6:39

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D++%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
இந்தியாவும், சீனாவும் தற்போது உலக பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை செலுத்த ஆரம்பித்துள்ளதாக ஜேர்மன் அதிபர் ஏங்கலா மேர்க்கல் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நேற்று இடம்பெற்ற உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில், உலக பொருளாதாரம் மற்றும் நிதியியல் தன்மை குறித்த பின்னூட்டல் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஏங்கலா மேர்க்கல் யோசனை தெரிவித்துள்ளார்.

இதேநேரம், அமெரிக்கா போன்ற நாடுகளின் கொள்கைகளும் இதில் தாக்கம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.