Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%3F
Friday, 08 February 2019 - 11:57
துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக படுகொலை செய்யப்பட் தமிழ் நடிகையின் தலை எங்கே?
916

Views
துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட துணை நடிகையின் உடல் பாகங்களில் தலை கிடைக்காததால், பெருங்குடி குப்பை கிடங்கில் 3 இயந்திரங்கள் உதவியுடன் காவல்துறையின் நடிகையின் தலையை தேடி வருகின்றனர்.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட சினிமா இயக்குநரை நீதிமன்ற உத்தரவுப்படி வரும் 19ம் திகதி வரை காவல்துiறியினர் புழல் சிறையில் அடைத்தனர்.

சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் கடந்த 21ம் திகதி மாலை பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் சேகரிக்கும் சிலர், ஒரு சாக்கு பையில் இரண்டு கால்கள் மற்றும் ஒரு கை இருந்ததை கண்டு பள்ளிக்கரணை காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்படி காவல்துiறியினர் சம்பவ இடத்துக்கு வந்து உடல் பாகங்களை மீட்டு விசாரணை நடத்தினர்.

அதில், மீட்கப்பட்ட உடல் பாகங்கள் மூலம் கொலையானவர் இளம்பெண் என்பது தெரியவந்தது. ஆனால் உடலின் மற்ற பாகங்கள் இல்லாததால் கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது தெரியாத நிலை நீடித்தது.

பின்னர் தனிப்படை காவல்துறையினர் உடல் பாகங்கள் எங்கு இருந்து வந்தது என்று விசாரணை நடத்திய போது, வள்ளுவர் கோட்டம் குப்பை தரம் பிரிக்கும் பகுதியில் இருந்து வந்தது உறுதி செய்யப்பட்டது.

ஆனால் பெண்ணின் தலை உள்பட மற்ற பாகங்கள் கிடைக்காமல் காவல்துiறியனர் திணறி வந்தனர்.

மேலும், குப்பை கிடங்கில் கைப்பற்றப்பட்ட கையில் சிவன் பார்வதி மற்றும் டிராகன் படம் பச்சை குத்தப்பட்டு இருந்தது.

அந்த புகைப்படம் சென்னை முழுவதும் உள்ள சுவர்களில் ஒட்டப்பட்டது. தமிழகம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் படங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையே, பள்ளிக்கரணை உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

அதில் பேசிய நபர் 'நான் தூத்துக்குடியில் இருந்து பேசுகிறேன். டிராகன் பச்சை குத்தப்பட்ட பெண் சந்தியா என்றும் இவர் திரைப்பட இயக்குநர் பாலகிருஷ்ணன் மனைவி என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார்'. உடனே அவர் சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

அதன்படி விசாரணை நடத்திய போது தான் கை மற்றும் கால்கள் வெட்டி கொலை செய்யப்பட்ட பெண் சினிமா இயக்குநர் பாலகிருஷ்ணன்(51) மனைவி சந்தியா என்று தெரியவந்தது.

பின்னர் தனிப்படை காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் பாலகிருஷ்ணனை பிடித்து விசாரணை நடத்திய போது, நான் தான் எனது மனைவி சந்தியாவை கொலை செய்தேன் என்று ஒப்புக்கொண்டார்.

அதன்பிறகு காவல்துறையினர் பாலகிருஷ்ணனை ஆறாம் திகதி கைது செய்தனர்.

பின்னர் சந்தியாவின் உடல் பாகங்கள் வீசப்பட்ட இடத்திற்கு திரைப்பட இயக்குநர் பாலகிருஷ்ணனை தனிப்படை காவல்துறையினர் நேரடியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, காசி திரையரங்கம் அருகே உள்ள அடையார் ஆற்றின் மேம்பாலம் கீழ் பகுதியில் குப்பையில் இருந்து சந்தியாவின் முழங்கால் பாகத்தை மீட்டனர்.

ஆனால் சந்தியாவின் தலை மற்றும் மார்பு பகுதி மட்டும் கிடைக்கவில்லை. இதனால் காவல்துறையினர் பாலகிருஷ்ணனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

அப்போது, 'என் மனைவியை துண்டு துண்டாக வெட்டி 4 பார்சலாக கட்டி கொண்டு வந்து குப்பை தொட்டி மற்றும் அடையார் ஆற்றில் வீசினேன். ஆனால் எந்த இடத்தில் தலை உள்ள பார்சல் வீசினேன் என்று எனக்கு தெரியவில்லை என்று திரும்ப திரும்ப கூறியுள்ளார்'.

பிறகு, சந்தியாவை கொடூரமாக வெட்டிய ஈக்காட்டுதாங்கல் வீட்டிற்கு காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு பாலகிருஷ்ணனை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது சந்தியாவின் உடலை துண்டிக்க பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பின்னர் காவல்துறையினர் பாலகிருஷ்ணனை நேற்று காலை 11.30 மணிக்கு ஆலந்தூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

அப்போது பாலகிருஷ்ணன் நீதவானிடம் ' நான் என் மனைவியை திட்டமிட்டு கொலை செய்யவில்லை. ஆத்திரத்தில் தான் நான் கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்'. அதன்பிறகு நீதவான் பாலகிருஷ்ணனை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி காவல்துறையினர் பாலகிருஷ்ணனை புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் இதுவரை தலை கிடைக்காததால் கொலை செய்யப்பட்ட நபர் சந்தியா தான் என்று காவல்துறையினர் உறுதியாக நிரூபிக்க முடியவில்லை.

இதனால் பாலகிருஷ்ணனை 7 நாள் காவல்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகளில் தற்போது காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட சந்தியாவின் தலை அடையார் ஆற்றில் வீசப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் பாதாள சுரடு மூலம் தேடி பார்த்தனர்.

ஆனால் தலை கிடைக்கவில்லை. பிறகு, கை மற்றும் கால்கள் மீட்கப்பட்ட பெருங்குடி குப்பை கிடங்கிலேயே குப்பைகளோடு மறைந்து இருக்கலாம் என்று காவல்துறையினர் கருதினர்.

அதன்படி பெருங்குடி குப்பை கிடங்கில் கை மற்றும் கால்கள் மீட்டகப்பட்ட இடத்தில், உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு தலைமையில் 10 ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் 3 பொக்லைன் உதவியுடன் நேற்று காலை 7.30 மணி முதல் தேடினர்.

ஆனாலும் சந்தியாவின் தலை மற்றும் மார்பு பாகங்கள் கிடைக்க வில்லை. பின்னர் போதிய வெளிச்சம் இல்லாததால் தலையை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பிறகு இன்று காலை 7.00 மணிக்கு மீண்டும் பணிகள் தொடங்கும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில் சந்தியாவுக்கு பல ஆண் நண்பர்கள் பழக்கம் கிடைத்தது. அவர்களுடன் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே சமூக வலைத்தளங்களில் சென்னையில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட பெண்ணின் கையில் பச்சை குத்தப்பட்டிருந்த டிராகன் மற்றும் சிவன்,பார்வதி படங்கள் குறித்து அடையாளம் தெரிந்தால் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தொலைபேசி எண்களுடன் வைரலாக வெளியாகியது.

இதை சந்தியாவுடன் நெருங்கி பழகி வந்த ஆண் நண்பர் ஒருவர் பார்த்தார். உடனே, காவல்துறையினரை தொடர்பு கொண்டு எனது தோழி சந்தியாவும் இதுபோல் அவரது கையில் டிராகன் படம் பச்சை குத்தி இருப்பார் என்றும், அவரை சில நாட்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறி, சந்தியாவின் கையடக்க தொலைபேசி எண்ணை காவல்துறையிக்கு கொடுத்துள்ளார். அதன் பிறகு தான் இந்த வழக்கில் திருப்பு முனையே ஏற்பட்டது.

சென்னையில் கணவனால் துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொல்லப்பட்ட நடிகை சந்தியாவின் சொந்த கிராமம் சோகத்தில் மூழ்கியது.

சந்தியாவின் சொந்த ஊர் குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ஞாலம் கிராமமாகும்.

சந்தியா கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது சொந்த ஊரான ஞாலம் கிராமம் சோகத்தில் மூழ்கியது.

இது குறித்து அவரது சித்தி உஷா கூறியதாவது: சந்தியாவை அவரது கணவர் தனியாக எங்கும் அனுப்புவதில்லை. மேலும் வீட்டை சுற்றிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அவர் தனியாக எங்கும் செல்ல முடியாது.

அதோடு அவரை பார்க்கவும் யாரும் வர முடியாது. இந்த நிலையில் அவரது நடத்தையில் பாலகிருஷ்ணனுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறுகிறார். இந்தநிலையில் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது சந்தியா தனியாக ஊருக்கு வந்தார்.

அதன்பின் கணவர் வீட்டுக்கு செல்லவில்லை. பின்னர் பாலகிருஷ்ணன் சந்தியாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நடந்ததை மறந்துவிடு. நாம் இனிமேல் சேர்ந்து வாழலாம். சென்னைக்கு வந்துவிடு என கூறியுள்ளார்.

கணவரின் பேச்சை நம்பி சந்தியா சென்னைக்கு புறப்பட்டு சென்றார். அங்கு சென்ற பின் சில நாட்களாக அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

துணை நடிகையின் தலை நேற்று வரை கிடைக்காததால் கொலையை உறுதி செய்யமுடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

இதனால், கைப்பற்றப்பட்ட உடல் பாகங்களை வைத்து உறவினர்கள் டிஎன்ஏ மூலம் பரிசோதனை செய்ய உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

துணை நடிகையான மனைவி சந்தியாவை நான் தான் வெட்டி கொலை செய்தேன் என்று பாலகிருஷ்ணன் வாக்கு மூலம் அளித்தாலும், கொலை செய்யப்பட்ட நபர் சந்தியா தானா என்று நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் காவல்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் பெருங்குடி மாநகராட்சி குப்பை கிடங்கில் கிடைத்த கை, கால்கள் மற்றும் காசி தியேட்டர் அருகே உள்ள அடையார் ஆற்றில் மீட்கப்பட்ட இடுப்பு பகுதியை ஒன்றிணைத்து ஒத்துப்போகிறதா? இது நடிகை சந்தியாவின் உடல் தானா? வேறு யாருடைய உடலா என்று காவல்துறையினர், கைரேகை மற்றும் உடல் பரிசோதனை மருத்துவ குழுக்களுடன் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதற்கிடையே, சந்தியாவின் உறவினர்களை அழைத்து வந்து காவல்துறையினர், கைப்பற்றப்பட்ட உடல் உறுப்புகள் துணை நடிகை சந்தியாவின் உடல் உறுப்புகள் தானா என்று கேட்டனர்.

அதற்கு உறவினர்கள்,'உடலில் தலை இல்லாததால் இது சந்தியாவின் உடல் பாகங்கள் தானா என்று எங்களால் உறுதியாக தெரிவிக்க முடியவில்லை' என்றனர்.

இதுவரை சந்தியாவின் தலை மற்றும் உடலின் மற்ற பாகங்கள் கிடைக்காததால், கிடைத்த உடல் பாகங்களை வைத்து டிஎன்ஏ பரிசோதனை செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இதனால் சந்தியாவின் தாய் அல்லது அவரது மகனை டிஎன்ஏ பரிசோதனை செய்து கிடைத்த உடல் பாகங்களின் டிஎன்ஏவுடன் ஒப்பிட்டு சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
3,666 Views
HiruNews
HiruNews
HiruNews
56,962 Views
HiruNews
HiruNews
HiruNews
21,812 Views
HiruNews
HiruNews
HiruNews
47,209 Views
HiruNews
HiruNews
HiruNews
1,424 Views
HiruNews
HiruNews
HiruNews
106,723 Views
Top