இலங்கையின் தேயிலைக்கு சர்வதேச மேம்பாட்டு வேலைத்திட்டமொன்று எதிர்வரும் 3 மாத காலப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா, ஜப்பான், ரஷ்யா, ஜேர்மன், அமெரிக்கா, உக்ரேன் மற்றும் அவுஸ்திரேலிய நாடுகளை இலக்காகக் கொண்டு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
இதற்காக 2.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக இலங்கை தேயிலைச் சபை தெரிவித்துள்ளது.
பொதுவான பிரசார நடவடிக்கைகளுக்கு அப்பால் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த பிரச்சார வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என்றும் அந்தச் சபை தெரிவித்துள்ளது.