Hirunews Logo
%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%21%21
Monday, 11 February 2019 - 12:10
உயிரிழக்கும் என தெரிந்தும் குழந்தையை பெற்றெடுத்து தாய் செய்துள்ள நெகிழ்ச்சி செயல்!!
1

Shares
119

Views
அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர், தனது வயிற்றில் வளரும் குழந்தை உயிரிக்கும்; எனத் தெரிந்தும், அதனை பெற்றெடுத்து உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்.

அமெரிக்காவில் டேவிஸ் லோவட் - கிறிஸ்டா டேவிஸ் தம்பதிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி பெண் குழந்தை பிறந்தது. இதற்கு ரைலே ஆர்கேடியா டயன் லோவட் என பெயரிட்டனர்.

கிறிஸ்டா கருவுற்று 18 வாரங்கள் ஆகியிருந்த நிலையில், அவரது வயிற்றில் இருக்கும் குழந்தை குறைபாடுகளுடன் உள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதன்படி பிறக்கும் போதே மிகவும் அரிதான சில பாகங்கள் மூளையில் இல்லாமல் பிறந்துள்ளது.

இதனால் மருத்துவர்கள் பெற்றோரிடம், குழந்தை 30 நிமிடத்திற்கு மேல் உயிருடன் இருக்காது என தெரிவித்துள்ளனர்.

இதனால் இருவரும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். ஆனால், அனைவரையும் ஆச்சரிப்பபடுத்தும் வகையில் மருத்துவர்களின் முயற்சியால் ஒரு வாரம் வரை உயிருடன் இருந்துள்ளது குழந்தை.

குழந்தை இறந்த பின்பு உடல் உறுப்புகளை தானம் செய்ய நினைத்தால் தானம் செய்யலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இந்நிலையில் டேவிஸ், லோவட் இருவரும் ஒரு வாரம் மருத்துவமனையிலேயே தங்கி, குழந்தை ரைலே உயிர் பிரியும் வரை அதன் உடன் இருந்துள்ளனர்.

மேலும் டேவிஸ் குழந்தையை தொடர்ந்து கண்காணிக்கையில், ரைலே அந்த ஒரு வாரத்தில் ஒரு முறை கூட அழவே இல்லை எனவும், இறப்பதற்கு சற்று முன்னர் லேசாக அழுததை கண்டதாகவும் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.

பின்னர் ஒக்ஸிஜனின் அளவு கணிசமாக குறைந்து குழந்தையின் உயிர் பிரிந்தது.

இதையடுத்து மருத்துவரின் அறிவுரையின் படி, உயிரிழந்த குழந்தையின் இதயவால்வுகள் இரண்டு குழந்தைகளுக்கு பொருத்தப்பட்டன.

சிறுநீர் மற்றும் பிற உறுப்புகள் மருத்துவ ஆராய்ச்சிக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறந்துபோகும் என தெரிந்தும் குழந்தையை பெற்றெடுத்து உறுப்பு தானம் செய்த தாய்
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
832 Views
HiruNews
HiruNews
HiruNews
16,457 Views
HiruNews
HiruNews
HiruNews
10,331 Views
HiruNews
HiruNews
HiruNews
28,228 Views
HiruNews
HiruNews
HiruNews
313 Views
HiruNews
HiruNews
HiruNews
63,354 Views
Top