Hirunews Logo
%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
Monday, 11 February 2019 - 12:42
அதிபர் சேவை போட்டி பரீட்சையில் வினாத்தாள்கள் மாற்றி வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு
163

Views
நாடளாவிய ரீதியில் நேற்று இடம்பெற்ற அதிபர் சேவையின் தரம் மூன்றுக்கான போட்டிப் பரீட்சையில் நுவரெலியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் தோற்றிய பரீட்சார்திகளுக்கு பரீட்சை வினாத்தாள்கள் மாற்றி வழங்கப்பட்டதாக இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் தெரிவித்திருந்தது.

குறித்த விடயம் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அந்த சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சங்கர் மணிவண்ணன் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் வினவுவதற்காக, எமது செய்தி பிரிவு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜீத்தவை பல முறை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அது பலனளிக்கவில்லை.

இதேவேளை, நேற்று இடம்பெற்ற அதிபர் சேவையின் தரம் மூன்றுக்கான போட்டிப் பரீட்சைக்காக புத்தளம் மாவட்டத்தில் தோற்றியிருந்த மூன்று பரீட்சாத்திகள் கையடக்க தொலைபேசியுடன் பரீட்சை எழுதியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பரீட்சைகள் திணைக்களம் இதற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

புத்தளத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பரீட்சைகள் இடம்பெற்ற போது அங்கு தோற்றியிருந்த பரீட்சாத்திகள் 3 பேரிடம் இருந்து குறித்த தொலைபேசிகளை, பரீட்சை மேற்பார்வையாளர்கள் மீட்டிருந்தனர்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
3,666 Views
HiruNews
HiruNews
HiruNews
56,962 Views
HiruNews
HiruNews
HiruNews
21,812 Views
HiruNews
HiruNews
HiruNews
47,209 Views
HiruNews
HiruNews
HiruNews
1,424 Views
HiruNews
HiruNews
HiruNews
106,723 Views
Top