Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+-+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%3F
Monday, 11 February 2019 - 13:08
மன்னார் மனித புதைக்குழி எச்சங்கள் - அறிக்கை எப்போது வெளியாகும்?
21

Views
மன்னார் மனித புதைக்குழியில் இருந்து மீட்கப்பட்டு, அமெரிக்காவிற்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் குறித்த பகுப்பாய்வு அறிக்கை எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு பின்னரே வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனித எச்சங்கள் பரிசோதனைக்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட போது, காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பில், சென்ற சட்டதரணி வி.எஸ்.நிரஞ்சன் இதனை தெரிவித்துள்ளார்.

மன்னாரில் வைத்து எமது செய்தி தொடர்பாளர், குறித்த பகுப்பாய்வு அறிக்கை தொடர்பில் அவரிடம் வினயவிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மனித எச்சங்களின் மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு 6 பொதிகளில் கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் திகதி விமானம் மூலம் அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டன.

பின்னர் அடுத்தநாள் 25 ஆம் திகதி புளோரிடாவில் உள்ள கூடத்திற்கு கார்பன் பரிசோதனைக்காக கையளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது அவை கார்பன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

இந்தநிலையில், குறித்த மாதிரிகள் ஆய்வு கூடத்தில் கையளிக்கப்பட்ட போது ஆய்வு அறிக்கை 14 கடமை நாட்களின் பின்னரே கிடைக்கும் என அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதற்கமைய 14 ஆம் திகதிக்கு பின்னர் மன்னார் நீதிமன்றத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது தபால் மூலமாக குறித்த அறிக்கை அனுப்பி வைக்கப்படவுள்ளதோடு, அதன் பிரதி தமக்கும் அனுப்பி வைக்கப்படும் என சட்டதரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையினை தமக்கும் அனுப்பி வைக்குமாறு சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ கோரியிருந்தார்.

இருப்பினும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக சென்ற சட்டத்தரணிகள் அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், அறிக்கை நீதிமன்றத்திற்கே அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் கோரியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஆய்வு அறிக்கையின் பின்னரே மன்னார் மனித புதை குழியில் இருந்து மீட்கப்பட்டு வரும் மனித எச்சங்கள் தொடர்பான உண்மை விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக வாதிடும் சட்டத்தரணி வி.ஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
3,666 Views
HiruNews
HiruNews
HiruNews
56,962 Views
HiruNews
HiruNews
HiruNews
21,812 Views
HiruNews
HiruNews
HiruNews
47,209 Views
HiruNews
HiruNews
HiruNews
1,424 Views
HiruNews
HiruNews
HiruNews
106,723 Views
Top