Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%90.%E0%AE%A4%E0%AF%87.%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
Monday, 11 February 2019 - 14:08
பிரபல சிங்கள பாடகர் ஐ.தே.கட்சியில் இணைந்தார்
445

Views
ஐக்கிய தேசிய கட்சிக்கு 6 புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நீர்கொழும்புக்கான புதிய தொகுதி அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தம்பதெனிய தொகுதி அமைப்பாளராக பாடகரான ரூகாந்த குணதிலகவும்,அரநாயக்க தொகுதி அமைப்பாளராக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பிரதியமைச்சர் லலித் திசாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி - பாத்ததும்பர தொகுதி அமைப்பாளராக மத்திய மாகாண முன்னாள் உறுப்பினர் திலின பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதவிர, வாரியபொல மற்றும் ஹிரியால தொகுதிகளுக்கான அமைப்பாளர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துவெளியிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் புதிய மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அதன் முதற்கட்ட நடவடிக்கையாக புதிய தொகுதி அமைப்பாளர்களை நியமித்துள்ளோம்.

தற்போது ஜனநாயக தேசிய முன்னணி ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும், இதில் சகல சக்திகளையும் இணைத்து கொண்டு முன்னோக்கி பயணிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தநிகழ்வில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசத்திடம், ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியை சேர்ந்த சிலர், எதிர்காலத்தில் தங்களுடன் இணைவார்கள் என குறிப்பிட்டார்.

எதிர்கால அரசியல் செயற்பாடுகளில் இணைந்து கொள்வதற்காக சிலர் தாங்களாவே முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
3,666 Views
HiruNews
HiruNews
HiruNews
56,962 Views
HiruNews
HiruNews
HiruNews
21,812 Views
HiruNews
HiruNews
HiruNews
47,209 Views
HiruNews
HiruNews
HiruNews
1,424 Views
HiruNews
HiruNews
HiruNews
106,723 Views
Top