Monday, 11 February 2019 - 16:26
அங்கொட லொக்காவின் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய நபரொருவர் கைது
டுபாயில் கைது செய்யப்பட்ட அங்கொட லொக்காவின் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய நபரொருவர் வலான ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் உந்துருளியொன்றில் பயணித்துக்கொண்டிருந்த போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடம் இருந்து 40 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் , சந்தேகநபர் மிரிஹான சிறப்பு விசாரணைப்பிரிவில் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.