Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B8%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+18+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
Monday, 11 February 2019 - 19:37
மாக்கந்துரே மதூஸுடன் கைதான சிங்கள பாடகர் உள்ளிட்ட 18 பேர் தொடர்பில் பரிசோதனையில் வௌியான தகவல்
948

Views
டுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துரே மதூஸுடன் இருந்த இலங்கையின் சிங்களப் பாடகர் அமல் பெரேரா உள்ளிட்ட 18 பேர் கொக்கெயின் பாவித்திருந்தமை பரிசோதனைகளில் உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்த ஆரம்பக்கட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.

இந்தநிலையில் அமல்பெரேரா அவரது மகன் நதீமால் பெரேரா மற்றும் நடிகர் ரயன் வென்ரோவன் உள்ளிட்ட 31 சந்தேகநபர்களும், தற்போது பர் - டுபாய் காவல் நிலையத்தில் தடுப்பில் உள்ளனர்.

டுபாயில் ஐந்து நட்சத்திர விருந்தகம் ஒன்றில் வைத்து கடந்த 5ம் திகதி அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை, இந்த விருந்தகம் சுற்றிவளைக்கப்பட்ட போது தப்பிச் சென்ற அங்கொட லொக்கா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயற்பாடுகளை புரியும் குழுவின் தலைவரும் பின்னர் டுபாய் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில், அமல்பெரேரா மற்றும் அவரது மகன் நதீமால் பெரேரா ஆகியோர் சார்பில் காவற்துறையில் விளக்கமளிப்பதற்கு தாம் சென்றுள்ளதாக, சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன டுபாய் தொலைபேசி ஊடாக எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

குறித்த இரண்டு பேரையும், விடுவிக்கவோ, பிணையில் செல்ல அனுமதிக்கவோ அல்லது இலங்கைக்கு நாடுகடத்தவோ நடவடிக்கை எடுக்குமாறு நாளையதினம் தாம் காவற்துறையினரிடம் கோரவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை. அபுதாபி மற்றும் டுபாயில் உள்ள இலங்கை தூதரகங்கள் உடாக அந்த நாட்டின் அதிகாரிகளுடன் இதுதொடர்பில் அவசியமான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சரோஜா சிறிசேன தெரிவித்துள்ளார்.

கைதானவர்கள் குறித்த நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் தூதரகங்கள் ஊடாக முழுமையான அவதானத்துடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
3,161 Views
HiruNews
HiruNews
HiruNews
56,579 Views
HiruNews
HiruNews
HiruNews
21,687 Views
HiruNews
HiruNews
HiruNews
47,024 Views
HiruNews
HiruNews
HiruNews
1,320 Views
HiruNews
HiruNews
HiruNews
106,305 Views
Top