Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%21
Monday, 11 February 2019 - 20:18
இருபதுக்கு இருபது தரப்படுத்தலில் திசர பெரேரா முன்னேற்றம்!
2,280

Views
20க்கு20 கிரிக்கட் போட்டிகளது புதிய தரப்படுத்தல்களின் படி, பாகிஸ்தான் அணி தொடர்ந்தும் முதல் இடத்தில் உள்ளது.

இரண்டாம் இடத்தில் இந்தியா இருக்கிறது.

அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளை பின்தள்ளி, தென்னாப்பிரிக்க அணி மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இங்கிலாந்து நான்காம் இடத்திலும், அவுஸ்திரேலியா ஐந்தாம் இடத்திலும் உள்ளன.

ஆறாம் இடத்தில் நியுசிலாந்தும், ஏழாம் இடத்தில் மேற்கிந்திய தீவுகளும், 8ம் இடத்தில் ஆப்கானிஸ்தானும் உள்ளன.

இலங்கை அணி 9ம் இடத்தில் உள்ளது.

பங்களாதேஸ் 10ம் இடத்தைப் பெற்றுள்ளது.

அதேநேரம், 20க்கு20 கிரிக்கட் போட்டிகளின் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசைப் பட்டியலின் படி, பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் முதலாம் இடத்தில் உள்ளார்.

நியுசிலாந்தின் கொலின் மன்றோ இரண்டாம் இடத்திலும், அவுஸ்திரேலியாவின் ஆரன் ஃபின்ச் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் எவின் லெவிஸ் நான்காம் இடத்திலும், அவுஸ்திரேலியாவின் க்லென் மெக்ஸ்வெல் ஐந்தாம் இடத்திலும், பாகிஸ்தானின் பஃகார் சமான் ஆறாம் இடத்திலும் உள்ளனர்.

இந்தியாவின் ரோஹித் ஷர்மா 7ம் இடத்தில் உள்ளார்.

இங்கிலாந்து வீரர்களான அலக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜேசன் ரோய் ஆகியோர் எட்டாம் மற்றும் 9ம் இடங்களில் உள்ள அதேநேரம். இந்தியாவின் லோகேஸ் ராஹுல் 10ம் இடத்தில் உள்ளார்.

இதேவேளை 20க்கு20 கிரிக்கட் போட்டிகளின் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலின்படி, ஆப்கானிஸ்தானின் ராசிட் கான் முதல் இடத்தில் உள்ளார்.

இந்தியாவின் குல்திப் யாதவ் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

பாகிஸ்தான் அணிவீரர்களான சதாப் கான் மற்றும் இமாட் வசிம் ஆகியோர் 3ம் மற்றும் 4ம் இடங்களில் உள்ளனர்.

இங்கிலாந்தின் ஆடில் ரசிட் ஐந்தாம் இடத்திலும், அவுஸ்திரேலியாவின் ஆதம் சம்பா 6ம் இடத்திலும், பங்களாதேஸின் அல் ஹசன் 7ம் இடத்திலும் உள்ளனர்.

நியுசிலாந்தின் இஸ் சோதி 8ம் இடத்தில் இருக்கும் அதேநேரம், பாகிஸ்தானின் ஃபாஹிம் அஷ்ரஃப் மற்றும் நியுசிலாந்தின் எம். சன்டார் ஆகியோர் 9ம் மற்றும் 10ம் இடங்களில் உள்ளனர்.

20க்கு 20 போட்டிகளில் சகலத்துறை வீரர்களுக்கான பட்டியலின்படி, அவுஸ்திரேலியாவின் க்ளென் மெக்ஸ்வெல் முதல் இடத்தில் உள்ளார்.

பங்களாதேஸின் சக்கிப் அல் ஹசன், ஆப்கானிஸ்தானின் மொஹமட் நபி ஆகியோர் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளனர்.

நான்காம் இடத்தில் பங்களாதேஸின் மஹமதுல்லாவும், ஐந்தாம் இடத்தில் இலங்கை அணியின் வீரர் திஸர பெரேராவும் உள்ளனர்.

துடுப்பாட்டம் , பந்து வீச்சு தரப்படுத்தல்களில் முதல் 20 இடங்களை இலங்கை வீரர்கள் எவரும் பிடிக்காத நிலையில் , இருபதுக்கு இருபது சகல துறை வீரர்களில் திசர பெரேரா 05ம் இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,285 Views
HiruNews
HiruNews
HiruNews
15,828 Views
HiruNews
HiruNews
HiruNews
10,160 Views
HiruNews
HiruNews
HiruNews
27,709 Views
HiruNews
HiruNews
HiruNews
185 Views
HiruNews
HiruNews
HiruNews
62,651 Views
Top