குசல் தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள செய்தி..!!

Sunday, 17 February 2019 - 8:42

%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF..%21%21
தென் ஆப்ரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதாவது போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி அணியினை வெற்றியடைய செய்த குசல் ஜனித் பெரேரா மற்றும் அணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்து செய்தியினை தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பக்கத்தில் ஜனாதிபதி வாழ்த்து செய்தியினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது.

டேபன் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில், தமது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 259 ஓட்டங்களையும் பெற்று கொண்டது.

இலங்கை அணி தமது முதல் இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களை பெற்று கொண்டது.

இந்தநிலையில் 304 என்ற வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா ஆட்டமிழக்காது 153 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.

இந்தநிலையில், 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை அணி ஒன்றுக்கு பூச்சியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.