உச்ச வரம்பு சில்லறை விலைகள்..

Sunday, 17 February 2019 - 13:07

%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அமுலாகும் வகையில் நாட்டரிசி மற்றும் சம்பா அரிசி ஆகியவற்றுக்கான உச்ச வரம்பு சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

நெல் ஆலை உரிமையாளர்களும் விவசாய அமைச்சும் இது தொடர்பான இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
 
இதற்கமைய நாட்டரிசி கிலோ ஒன்று 80 ரூபா சம்பா அரிசி கிலோ ஒன்று 85 ரூபா என்ற உச்ச வரம்பு விலைகளுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்தநிலையில் நாட்டரிசி நெல் கிலோ ஒன்று 38 ரூபாவிற்கும் சம்பா நெல் கிலோ ஒன்று 41 ரூபாவிற்கும் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.