நீர் விளையாட்டில் ஈடுபட்டவரை கடித்து குதறிய சுறா!!

Sunday, 17 February 2019 - 14:36

%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE%21%21
அவுஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ்சில் நீர் விளையாட்டில் ஈடுபட்டிருந்த ஒருவர் சூறாவின் தாக்குதலுக்கு உள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காலில் பாரிய காயத்திற்கு உள்ளான அவர், வாநூர்தி மூலம் மருத்துவமனைக்கு இட்டுச் செல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரதூரமான காயமான போதிலும், அவரது உயிருக்கு ஆபத்தில்லை என கோல்ட் கோஸ்ட் பல்கலைக்கழக மருத்துவமனை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.