வெற்றியை பெற்று கொடுத்த குசல் ஜனித் பெரேராவிற்கு கிடைத்துள்ள இடம்

Sunday, 17 February 2019 - 20:01

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
தென்னாபிரிக்க அணியை தோல்வியுற செய்து இலங்கை அணிக்கு டெஸ்ட் வெற்றியை பெற்று கொடுத்த குசல் ஜனித் பெரேரா, சர்வதேச கிரிக்கட் சபையின் டெஸ்ட் துடுப்பாட்ட தர வரிசையில் 58 இடங்கள் முன்னேறியுள்ளார்.

இதன்படி அவர் டெஸ்ட் துடுப்பாட்ட தர வரிசையில் 40 ஆவது இடத்தை பெற்றுள்ளார்.

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இலங்கை அணியை வழி நடத்திய திமுத் கருணாரத்ன, அந்த தர வரிசையில் 10 ஆவது இடத்தில் உள்ளதுடன், அஞ்சலோ மெத்தியூஸ் 17 ஆவது இடத்திலும், தினேஸ் சந்திமால் 27 இடத்திலும் உள்ளனர்.

கடந்த வருடம் இந்திய அணியின் தலைவர் விராட் கோலிக்கு பின்னர் அதிக டெஸ்ட் ஓட்டங்களை பெற்றுக்கொண்ட குசல் மெண்டிஸ், இந்த தர வரிசை பட்டியலில் 29 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.