காஷ்மீரில் இடம்பெற்ற மோதலில் நான்கு இராணுவத்தினர் பலி

Monday, 18 February 2019 - 19:53

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் ஆயுததாரிகளுடன் இன்று இடம்பெற்ற மோதலில் நான்கு இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை இந்திய துருப்பினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 46 பேர் கொல்லப்பட்ட புல்வாம மாவட்டத்தில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்திய துருப்பினர் அங்கு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கி பிரயோகத்தில் ஒரு பொது மகனும் கொல்லப்பட்டுள்ளார் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்ற நிலை தொடரும் நிலையில், டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதுவர் பாகிஸ்தானிற்கு மீள அழைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதுவரை இந்தியா புதுடில்லிக்கு அழைத்திருந்தது.

தூதுவர்களுடன் ஆலோசனையினை மேற்கொள்வதற்காகவே அழைக்கப்பட்டதாக இரு நாடுகளும் பரஸ்பரம் தெரிவித்துள்ளன.

இதேவேளை, கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற தாக்குதலை அடுத்து இந்தியாவின் பல இடங்களில் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

குறிப்பாக சில குழுக்களினால் பாகிஸ்தானிய வர்த்தக நிலையங்கள் மீதும், காஷ்மீர் மாணவர்கள் மீதும் கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டாக தெரிவிக்கப்பட்டுள்ளது.