ரத்கம கடத்தலுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் - மகிந்த தெரிவிப்பு

Tuesday, 19 February 2019 - 20:08

%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
காலி - ரத்கம பகுதியில் வர்த்தகர்கள் இருவர் காணாமல்போன சம்பவத்திற்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தங்காலை - கால்டன இல்லத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

1989 மற்றும் 1990ஆம் ஆண்டுகாலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களைப் போலவே இந்தச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்திற்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அதிலிருந்து விடுபட முடியாது என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.