இந்திய வீடமைப்புத் திட்டத்தில் ஒரு வீடாவது நிர்மாணிக்கப்பட்டுள்ளதா? - சுசில் கேள்வி

Tuesday, 19 February 2019 - 20:15

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE%3F+-+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF
வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளைக் நிர்மாணிப்பதற்கான இந்திய வீடமைப்புத் திட்டத்தில் ஒரு வீடாவது நிர்மாணிக்கப்பட்டுள்ளதா என ஒன்றிணைந்த எதிரணி கேள்வி எழுப்பியுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர், பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், மன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு கப்பல் அல்லது படகு சேவையை ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், வடக்கு மக்களின் தற்போதைய முக்கிய பிரச்சினை இவைதானா என சுசில் பிரேமஜயந்த கேள்வி எழுப்பியுள்ளார்.

30 ஆண்டுகால யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு தமிழ் மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்காக இந்திய அரசாங்கத்தினால் கடந்த 4 ஆண்டுகுளுக்கு முன்னர் நிதி வழங்கப்பட்டது.

எனினும், குறித்த வீடமைப்புத் திட்டத்தில் ஒரு வீடாவது நிர்மாணிக்கப்பட்டுள்ளதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.