தென்னிந்திய துறைமுகங்களுக்கான கப்பல் போக்குவரத்து

Wednesday, 20 February 2019 - 13:26

+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+
காங்கேசன்துறை மற்றும் தலை மன்னாரில் இருந்து தென்னிந்திய துறைமுகங்களுக்கான பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கான கட்டமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறை துறைமுக கட்டுமானப் பணிகள் ஏலவே ஆரம்பிக்கப்பட்டு விட்டன.

அத்துடன் தலைமன்னாரில் இறங்குதுறை அமைக்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் போக்குவரத்துக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் துறைமுக அதிகார சபையினால் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.