கிரிக்கட் தேர்தல் தொடர்பில் நீதிமன்றில் இணக்கம்

Wednesday, 20 February 2019 - 14:13

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
நாளைய தினம் இடம்பெறவுள்ள ஸ்ரீ லங்கா கிரிக்கட் தேர்தலில், செயலாளர் பதவிக்கு மொஹான் டி சில்வாவும், உப தலைவர் பதவிக்கு ரவீன் விக்ரமரட்னவும், தலைவர் பதவிக்கு சமீம் டி சில்வாவும் போட்டியிடுவதற்கு நீதிமன்றில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

கிரிக்கட் தேர்தலுக்கான தங்களது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் மொஹான் டி சில்வாவும், ரவீன் விக்ரமரட்னவும் மேன்முறையீடு செய்திருந்தனர்.

குறித்த மேன்முறையீடு, மேன்முறையீட்டு நீதிமன்றத் தவிசாளரான நீதியரசர் தீபாலி விஜேசுதந்தர மற்றும் நீதியரசர் அர்ஜுன் ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், குறித்த வழக்கு அடுத்த மாதம் 21 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.