பாக்கிஸ்தான் வீரர்களுக்கு வீசா அனுமதி வழங்கப்படாது

Friday, 22 February 2019 - 10:33

+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81
இந்தியாவில் ஒலிம்பிக் சார்ந்த போட்டிகளை நடத்துவது சம்மந்தமான அனைத்து கலந்துரையாடல்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழுமம் அறிவித்துள்ளது.
 
இந்தியாவில் நடைபெறும் உலக கிண்ண துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் கலந்துக் கொள்வதற்கு பாகிஸ்தான் வீரர்களுக்கு வீசா அனுமதி வழங்கப்படவில்லை.
 
காஷ்மீர் - புல்வாமா பகுதியில் 40 இந்திய படையினர் கொல்லப்பட்டதை அடுத்து இந்திய அதிகாரிகள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருந்தனர்.
 
எனினும் இது சர்வதேச ஒழும்பிக் சட்டவிதிகளுக்கு முரணான செயற்பாடு என்று ஒலிம்பிக் குழுமம் அறிவித்துள்ளது.
 
இந்தநிலையில் எதிர்காலத்தில் இந்தியாவில் ஒலிம்பிக் சார்ந்த போட்டிகளை நடத்துவது தொடர்பான அனைத்து கலந்துரையாடல்களையும் ஒலிம்பிக் சம்மேளனம் தற்காலிகமாக இடைநிறுத்துகிறது.

மேலும் சர்வதேச ஒலிம்பிக் சட்ட விதிகள் மதிக்கப்படும் என்று இந்தியா எழுத்து மூலமாக உறுதியளிக்கும் வரையில் இந்த தடை அமுலில் இருக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.