Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95
Thursday, 14 March 2019 - 15:17
இலங்கைக்கு அழைக்கப்படவுள்ள சந்திக
3,382

Views
இலங்கை கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க, தென்னாப்பிரிக்காவில் இருந்து நாட்டுக்கு மீள அழைக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா கிரிக்கட் இதனைத் தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஐந்தவாது ஒருநாள் போட்டியின் பின்னர் அவரை நாடு திரும்புமாறு அழைத்துள்ளதாகவும், இரண்டு அணிகளுக்கும் இடையிலான 20க்கு20 கிரிக்கட் தொடரில் ஸ்ரீவ் ரிக்சன் தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்படுவார் என்றும் சிறிலங்கா கிரிக்கட்டின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹத்துருசிங்க நாடு திரும்பியதும், இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை அணியை முன்னகர்த்துவதற்கான அவரது திட்டங்கள் குறித்து விளக்கமளிக்குமாறு கோரப்படவுள்ளார்.

2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஹத்துருசிங்க இலங்கை கிரிக்கட் அணிக்கான தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகிறார்.

பங்களாதேஸ் கிரிக்கட் அணியை வெற்றிகரமான அணியை மாற்றியதை அடுத்து அவருக்கு இந்த பதவி அவருக்கு வழங்கப்பட்டது.

எனினும் அவரது நியமனத்தின் பின்னர், இலங்கை கிரிக்கட் அணி சர்வதேச கிரிக்கட் பேரவையின் தரவரிசைப் பட்டியலில் பின்னடைவை சந்தித்ததுடன், 2020ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள 20க்கு20 கிரிக்கட் உலகக் கிண்ணத்தொடருக்கு போட்டியின்றி தெரிவாகும் வாய்ப்பையும் இழந்தது.

அதேநேரம் தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் கிரிக்கட் தொடர் ஒன்றை வென்ற முதலாவது ஆசிய நாடு என்ற பெருமையையும் இலங்கை அவரது பயிற்றுவிப்பின் கீழ் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,312 Views
HiruNews
HiruNews
HiruNews
55,887 Views
HiruNews
HiruNews
HiruNews
21,456 Views
HiruNews
HiruNews
HiruNews
46,692 Views
HiruNews
HiruNews
HiruNews
1,194 Views
HiruNews
HiruNews
HiruNews
105,605 Views
Top