Hirunews Logo
+475+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 14 March 2019 - 19:54
475 ரூபா மாத்திரமே நாளாந்த வேதனம்
26

Views
கைக்காசுக்கு தொழில்புரியும் தொழிலாளர்களுக்கு 475 ரூபா மாத்திரமே நாளாந்த வேதனமாக வழங்கப்பட்டு வருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இன்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், கைக்காசுக்கு தொழில்புரியும் அனைத்து தொழிலாளர்களுக்ம் நாளாதாந்த அடிப்படை வேதனமாக 700 ரூபாவை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவித்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

கூட்டு ஒப்பந்தத்தினால் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட முரண்பாடுகளுக்கு தீர்வு காணும் குழு இன்று முதல் தடவையாக கூடியது.

இந்தச் சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் அதன் பிரதித் தலைவர் பரத் அருள்சாமி மற்றும் காங்கிரஸின் பிரதிப் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இதேநேரம், முதலாளிமார் சம்மேளனத்தின் சார்பில் பல தோட்ட நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்தகொண்டுள்ளனர்.

இந்தநிலையில், குறித்த சந்திப்பில், வெளிஆள் உற்பத்தி முறைமை தொடர்பில், முரண்பாடுகளுக்கு தீர்வு காணும் குழுவில் ஆராயப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உத தலைவர் பரத் அருள்சாமி எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,634 Views
HiruNews
HiruNews
HiruNews
56,158 Views
HiruNews
HiruNews
HiruNews
21,518 Views
HiruNews
HiruNews
HiruNews
46,823 Views
HiruNews
HiruNews
HiruNews
1,231 Views
HiruNews
HiruNews
HiruNews
105,882 Views
Top