Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88..
Friday, 15 March 2019 - 14:17
இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை..
13

Views
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்காக, பெருந்தோட்ட நிறவனங்களுக்கு கடன்வழங்குவது தொடர்பில் இன்னும் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை என்று இலங்கை தேயிலை சபை அறிவித்துள்ளது.
 
அதன் தலைவர் லூசில் விஜயவர்தன எமது செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தீயேக செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதனம் தொடர்பான கூட்டு உடன்படிக்கை 700 ரூபாய் என்ற அடிப்படை வேதனத்துக்கு கடந்த ஜனவரி மாதம் 28ம் திகதி கைச்சாத்தானது.
 
முன்னைய ஒப்பந்த காலத்தில் நிலவியத் மொத்த வேதனத்தைவிட 20 ரூபாய் மாத்திரமே இந்தமுறை அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதை, கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களில் ஒன்றான இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் ஒப்புக் கொண்டுள்ளது.
 
அதேநேரம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மேலதிமாக கொடுப்பனவு ஒன்றை வழங்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அவர்களுக்கு நாளாந்தம் 50 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கும், அதற்காக தேயிலை சபையில் இருந்து 1.2 பில்லியன் ரூபாய்களை கடனாக நிறுவனங்களுக்கு வழங்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
 
நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதனை கடந்த தினம் உறுதிப்படுத்தினார்.
 
இதுதொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்து வெளியிட்ட இலங்கை தேயிலை சபையின் தலைவர் லு{ஸில் விஜயவர்தன, குறித்த தொகையை தேயிலை சபையின் விரிவாக்கல் நிதியில் இருந்து வழங்குவதற்கான முதற்கட்ட இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
 
இதன்படி 1.2 பில்லியன் ரூபாய்களை நிறுவனங்களுக்கு கடனாக வழங்கவும், இதனை 2 வருடங்களில் மீளப் பெறவும், 4 சதவீதம் தொடக்கம் 8 சதவீதம் வரையில் அந்த கடனுக்கு வட்டியை அறவிடம் இதுவரையில் கொள்கை அளவில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

எனினும் இந்த விடயத்தில் இறுதி உடன்படிக்கை ஏற்படுத்தப்படவில்லை.
 
அரசாங்கம் இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டதன் பின்னர், இந்த உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அதேநேரம் இந்த கொடுப்பனவிற்கான கடன்தொகையை வழங்குவதால் தேயிலை சபைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், இதற்கு முன்னரும் இவ்வாறான கடன்வழங்கல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
 
நாட்டின் தேயிலை உற்பத்தி மூலம் மொத்தமாக வருடாந்தம் 1500 மில்லியன் டொலர்கள் வருமானம் கிடைக்கின்றன.
 
அவற்றில் 7 மில்லியன் டொலர்கள் மாத்திரமே இந்த கடன் தொகையாக வழங்கப்படவுள்ளது.
 
இது மொத்த தேயிலை உற்பத்தி வருமானத்தில் 0.47 சதவீதமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,808 Views
HiruNews
HiruNews
HiruNews
56,296 Views
HiruNews
HiruNews
HiruNews
21,568 Views
HiruNews
HiruNews
HiruNews
46,887 Views
HiruNews
HiruNews
HiruNews
1,267 Views
HiruNews
HiruNews
HiruNews
106,024 Views
Top