தென் கிழக்கு சிம்பாப்வேயில் பாரிய சூறாவளி

Saturday, 16 March 2019 - 19:47

%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF
தென் கிழக்கு சிம்பாப்வேயில் ஏற்பட்ட பாரிய சூறாவளியுடனான வெள்ளப்பெருக்கு காரணமாக குறைந்தது 24 பேர் பலியாகியுள்ளதாக, அந்த நாட்டு தகவல் அமைச்சு தெரிவித்துள்ளது.

பல வீடுகள் மற்றும் பாலங்கள் முற்றாக வெள்ளத்தினால் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பிரதேசத்தில் உள்ள பல நகரங்களுக்கான மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு சேவைகள் நேற்று முதல் துண்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக 2 மாணவர்கள் உட்பட 40 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் அமைச்சின் டுவிட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 2006ஆம் ஆண்டு இந்த பிரதேசத்தில் ஏற்பட்ட சூறாவளியுடனான அனர்த்தத்தின் பின்னர் தற்போது இடம்பெறும் அனர்த்தம் இதுவென நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிக்கரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

பாதிப்படைந்த பிரதேசங்களில் உள்ள மக்களை மீட்டெடுக்கும் பணிகளில் உலங்கு வானூர்த்திகள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்ற போதிலும் தொடர்ச்சியான காலநிலை சீர்கேடு காரணமாக இந்த பணிகள் மந்த கதியில் இடம்பெறுகின்றன.

இந்த வருடம் சிம்பாப்வே பாரிய வறட்சி காரணமாக பயிர்ச்செய்கைகள் அதிகள் சேதமடைந்தன.

இந்த பிராந்தியத்தில் உள்ள பாதிப்படைந்த 53 லட்சம் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான அமைப்பு வலியுறுத்தியுள்ளது.