பாலஸ்தீனில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இஸ்ரேலியர் பலி

Sunday, 17 March 2019 - 21:24

+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+
பாலஸ்தீனிய மேற்குகரை பிராந்தியத்தில் பாலஸ்தீயர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இஸ்ரேலியர் ஒருவர் பலியானதுடன், மேலும் 4 இஸ்ரேலியர்கள் காயமடைந்தனர்.

யுத குடியிருப்புக்கு அருகாமையில் கடமையில் இருந்த ஸ்ரேலிய இராணுவ சிப்பாய் ஒருவரின் ஆயுதத்தை பறித்த குறித்த பாலஸ்தீனியர் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது ஒருவர் பலினாதுடன் நான்கு காயமடைந்ததாக இஸ்ரேலிய வானொலி தெரிவித்துள்ளது.

துப்பாக்கிதாரி பின்னர் மேலும் இஸ்ரேலியர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு, மகிழூந்து ஒன்றில் பலவதந்தமாக தப்பிச்சென்றுள்ளார்.

தப்பிச்சென்றவர் பின்னர், பயணிகள் பேருந்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இஸ்ரேலிய இராணுவத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் இந்த சம்பவங்களை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தப்பிச்சென்ற துப்பாக்கிதாரியை தேடும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேற்குகரையோர பிராந்தியத்தில் கடந்த 2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் அடிக்கடி இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும் அண்மை காலத்தில், குறித்த சம்பவங்கள் குறைந்திருந்தன.

கடந்த 1967ஆம் ஆண்டு மத்திய கிழக்கு யுத்தத்தின் போது மேற்கு கரை பிராந்தியம் இஸ்ரேலிய துருப்பினரால் கைப்பற்றப்பட்டது.

இதனையடுத்து, இஸ்ரேலிய பாலஸ்தீனிய தரப்பினருக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் கடந்த 2014ம் ஆண்டு முற்றாக தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.