காவல்துறை அதிகாரியை பலியெடுத்த வாகன விபத்து – சாரதி மீளவும் விளக்கமறியலில்

Monday, 18 March 2019 - 15:05

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E2%80%93+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
பொரளை போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியை மோதிவிட்டு தப்பிச் சென்ற டிப்பென்டர் ரக வாகனத்தின் சாரதி எதிர்வரும் முதலாம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிரபு பாதுகாப்பு பிரிவின் காவற்துறை அத்தியட்சகர் ஒருவரின் புதல்வரான நவிது ஒமேஷ் ரத்நாயக்க என்ற சந்தேகத்துக்குரியவர் இன்று கொழும்பு மேலதிக நீதவான் சலனி பெரேரா முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.

இதன்போது அவர் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டதுடன், அன்றைய தினம் போக்குவரத்து கடமையில் இருந்த காவற்துறை அதிகாரி ஒருவரினால் சந்தேகத்துக்குரியவர் அடையாளங் காணப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 ஆம் திகதி பம்பலபிட்டி - டுப்ளி புலர்ஸ் சந்தியில் பயணித்த பொரளை போக்குவரத்து காவற்துறை பொறுப்பதிகாரியின் உந்துருளியில் மோதுண்ட சந்தேகத்துக்குரிய டிப்பென்டர் ரக சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றார்.

பின்னர் அந்த விபத்து தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகேவின் புதல்வர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களில் 6 பேருக்கு பிணை வழங்கப்பட்டது.

சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொரளை காவற்துறையின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஆனந்த சாகர சரத்சந்ர கடந்த 9 ஆம் திகதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.