மத்திய மலை நாட்டில் செயற்கை மழை - காணொளி

Friday, 22 March 2019 - 18:02

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
மவுஸ்ஸாகலை நீரேந்தும் பகுதியில் இன்றைய தினம் செயற்கை மழை பொழிவு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை விமானப் படையின் y-12 ரக உலங்கு வானூர்தி ஊடாக 8,000 அடி உயரத்தில் உள்ள முகில் கூட்டங்களைப் பயன்படுத்தி இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது.

முகில் கூட்டங்களின் மீது இரசாயண திரவியங்களை பரவவிட்டதன் ஊடாக, சுமார் 45 நிமிடங்களுக்கு செயற்கை மழை பொழியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செயற்கை மழை பொழிவின் சாதகத் தன்மைக்கு அமைய, வெப்பமான வானிலையில் மாற்றம் ஏற்படும்வரை செயற்கை மழை பொழியும் பணிகளை எதிர்காலத்தில் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவள அமைச்சு தெரிவித்துள்ளது.