இலங்கை அணி மற்றும் தென் ஆப்ரிக்க அணியை அதிர வைத்த இசுரு ...!! காணொளி

Saturday, 23 March 2019 - 7:57

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81++...%21%21++%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+
இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட 20க்கு 20 தொடரை தென்னாபிரிக்க அணி, 2க்கு0 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற இரண்டாவது 20க்கு 20 போட்டியில் 16 ஓட்டங்களினால் வெற்றிபெற்றதன் ஊடாக தென்னாபிரிக்க அணி, தொடரை தம்வசமாக்கியது.
 
நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 20 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றது.
 
இதையடுத்து, 181 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை மாத்திரம்பெற்று தோல்வியடைந்தது.
 
இலங்கை அணி சார்பில் 8ஆம் இலக்க துடுப்பாட்ட வீரரான இசுரு உதான 48 பந்துகளில் 6 ஆறு ஓட்டங்கள், 8 நான்கு ஓட்டங்கள் அடங்களாக ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றுக்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.