கோர விபத்தில் சிக்கிய மற்றும் ஓர் பேருந்து..!!

Sunday, 24 March 2019 - 11:23

%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..%21%21
மதுகம அளுத்கம வீதி வெலிபென்ன பிரதேசத்தில் சொகுசு பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்து 25 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று மாலை வெலிபென்ன அதிவேக வீதி நுழைவாயில் அருகாமையில் வைத்து குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

விபத்தில் உயிரிழந்தவர்  அனுங்கல பிரதேசத்தினை சேர்ந்த 40 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணம் மேற்கொண்ட பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.