98 வீடுகள் பயனாளர்களிடம் ஒப்படைப்பு! (காணொளி இணைப்பு)

Sunday, 24 March 2019 - 16:08

98+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D++%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%29
இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் கொத்மலை எல்படை தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 98 தனிவீடுகள் அடங்கிய 'பகத் சிங் புரம்' இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.

ஒவ்வொரு வீடுகளும் ஏழு பேர்ச்சஸ் காணியில் 505 சதுரஅடி பரப்பு கொண்ட 2 அறைகள், வரவேற்பறை, குளியறை மற்றும் சமையலறை போன்ற வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் ஊடாக 98 மில்லியன் ரூபாவும், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்மைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 15 மில்லியன் ரூபாவும் குறித்த வீடுகளுக்காக செலவிடப்பட்டுள்ளது.

அத்துடன், காணி உறுதிப்பத்திரங்களும் இதன்போது மக்களுக்கு கையளிக்கப்பட்டன.

இந்தநிகழ்வில் கலந்துக் கொண்ட நிதியமைச்சர் மங்கள சமரவீர, இன்றைய கால கட்டத்திலும், தேயிலை தொழில்துறை பொருளாதாரத்தை சக்திமயப்படுத்துகிறதாக தெரிவித்தார்.

இதற்காக மலையக மக்கள் பெறும் பங்கு வகிப்பதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பழனி திகாம்பரம், தற்போதைய அரசாங்கமே மலையக மக்களுக்கு முகவரியை தந்தாக குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதியுதவிகள் பெரும்பானவை, அன்பளிப்பாக வழங்கப்படுவதாகவும், அதனை திருப்பி கையளிக்க வேண்டிய தேவையில்லை எனவும் இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ராதா கிருஸ்னண் தெரிவித்துள்ளார்.