பிரதமருக்கு எதிராக , பிரித்தானிய நாடாளுமன்றில் வாக்கெடுப்பு

Tuesday, 26 March 2019 - 7:28

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%2C+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான ப்ரெக்ஸிட் செயன்முறையை தமது பொறுப்பில் எடுப்பதற்காக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றைய தினம் வாக்களிப்பில் ஈடுபட்டனர்.

பிரதமர் தெரெசா மேயை தோற்கடிப்பதற்காக ஆளும் கொன்சர்வேடிவ் கட்சியின் 3 அமைச்சர்கள் உட்பட 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது வாக்களித்துள்ளனர்.

ப்ரெக்ஸிட் செயன்முறையை தமது பொறுப்பில் ஏற்பதற்காக 329 நாடாளுமுன்ற உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், அதற்கு எதிராக 302 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

இந்த நிலையில், கருத்து தெரிவித்துள்ள பிரித்தானிய பிரதமர் தெரெசா மே, நாட்டுக்கு தாக்கம் செலுத்தும் இதுபோன்ற செயன்முறையின்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரத்தை கையிலெடுப்பது தவறான முன்னுதாரணமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.