Hirunews Logo
+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF...
Sunday, 14 April 2019 - 14:19
சூடானில் விரைவில் ஜனநாயக முறையிலான ஆட்சி...
236

Views
சூடானின் இராணுவ சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட லெப்டினண்ட் ஜென்ரல் அப்டெல் பற்றா புர்ஹான் சூடானில் விரைவில் ஜனநாயக முறையிலான ஆட்சி ஸ்தாபிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி தரப்புடன் கலந்தாலோசித்ததன் பின்னர் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தற்போது உள்ள இடைக்கால நிர்வாகம் 2 வருட காலத்திற்கு மேல், இயங்காது என அவர் தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும், 30 வருடங்களாக ஜனாதிபதியாக தொழில்பட்ட ஒமா அல் பஷீரை பதவியில் இருந்து அகற்றிய ஆர்ப்பாட்டக்காரர்கள் உடனடியான சிவில் அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
 
அதுவரை தமது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், அதுவரை தாம் வீதியை விட்டு வெளியேறப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

புதிதாக பதவி ஏற்றுள்ள இராணுவ குழுவின் தலைவர் தமது முதலாவது பொது மக்களுக்கான உரையினை ஆற்றியுள்ளார்.

அரச தொலைக்காட்சியில் தோன்றிய அவர் உடனடியாக இரவு நேர ஊரடங்கு சட்டத்தினை விலக்கிக் கொள்ளவதாக தெரிவித்ததுடன், அவசர கால சட்டத்தின் கீழ் சிறையடைக்கப்பட்டுள்ள சகல அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இது தவிர, சூடானில் உள்ள பிராந்திய அரசாங்கங்கள் அனைத்தையும் கலைத்துள்ள அவர், சம்பந்த பட்ட தரப்பினர் அனைவரும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக முறையிலான தேர்தல் நடைபெற்று மக்கள் ஆட்சி பொறுப்பினை ஏற்கும் வரை சூடானின் அமைதி மற்றும் பாதுகாப்பினை இராணுவம் சிறந்த முறையில் மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
3,544 Views
HiruNews
HiruNews
HiruNews
23,395 Views
HiruNews
HiruNews
HiruNews
11,821 Views
HiruNews
HiruNews
HiruNews
32,804 Views
HiruNews
HiruNews
HiruNews
26 Views
HiruNews
HiruNews
HiruNews
71,009 Views
Top