Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88++%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F++%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D...
Monday, 15 April 2019 - 14:17
முழுமையான விளக்கங்களை வெளியிட திட்டம்...
4,324

Views
மன்னார் மனித புதைகுழி தொடர்பில் முழுமையான விளக்கங்களை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
மனித புதைகுழி விடயத்துடன் தொடர்புடைய மேலும் சில தரப்பினருடன் இணைந்து கூட்டு அறிக்கையாக குறித்த அறிக்கையை வெளியிட காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
மன்னார் மனித புதைக்குழியில் இருந்த மீட்கப்பட்ட மனித எச்சங்கள் கிறிஸ்துக்குப் பின் 1400 தொடக்கம் 1650ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்டது எனக் கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க காபன் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காபன் பரிசோதனை அறிக்கையான கடந்த மாத முற்பகுதியில் வெளியாக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, அந்த அறிக்கை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை வெளியிட்டு வந்தனர்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் விளக்கங்களை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றை வெளியிடுவதற்கு காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

இந்த அறிக்கையானது அடுத்த வாரமளவில் வெளியிடப்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நேற்று முன்தினம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் பணிகள் குறித்து சர்வதேச அமைப்பொன்றின் மாநாடு ஒன்றில் அவர் பங்கேற்க உள்ளார்.

இந்த நிலையில், அவர் எதிர்வரும் 22 ஆம் திகதியளவில் குறித்த மாநாட்டை நிறைவுசெய்து நாடு திரும்பவுள்ளார்.

இதையடுத்து, இம்மாத இறுதிப் பகுதியில் சாலிய பீரிஸுக்கும், பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
இந்தக் கலந்துரையாடலில் முக்கிய பல விடயங்கள் குறித்து ஆராயப்பட உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் நேற்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் நேற்றைய தினம் 785 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியறியும் சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இந்தப் போராட்டத்தில் கருத்து தெரிவித்துள்ள  சங்கத்தின் தலைவி கா.ஜெயவனிதா,

தங்களின் போராட்டம் 3 ஆவது வருடமாக தொடர்கின்ற நிலையிலும், தீர்வு கிட்டவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,634 Views
HiruNews
HiruNews
HiruNews
56,158 Views
HiruNews
HiruNews
HiruNews
21,518 Views
HiruNews
HiruNews
HiruNews
46,823 Views
HiruNews
HiruNews
HiruNews
1,231 Views
HiruNews
HiruNews
HiruNews
105,882 Views
Top