Hirunews Logo
%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Monday, 15 April 2019 - 16:00
உலகக் கிண்ண தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
1,329

Views
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

கோலி தலைமையிலான இந்த அணியில், தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

12 ஆவது உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை மாதம்14 ஆம் வரை இடம்பெறவுள்ளது.

இதில் நடப்பு செம்பியன் அஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதோஸ், இலங்கை, ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில், உலகக் கிண்ண இந்திய அணியை தேர்வு செய்வதற்காக, இந்திய கிரிக்கெட் சபை தேர்வு குழு கூட்டம் மும்பையில் இன்று பிற்பகல் நடைபெற்றது.

தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தேர்வாளர்கள் மற்றும் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையின் முடிவில் உலகக் கோப்பையில் விளையாடும் அணி தேர்வு செய்யப்பட்து அறிவிக்கப்பட்டது.

விராட் கோலி தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியில் தமிழக வீரர்கள் விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அம்பத்தி ராயுடு, ரிஷப் பந்த் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்திய அணி குழாமில், அணித்தலைவர் விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விஜய் சங்கர், எம்.எஸ்.டோனி,  கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
3,824 Views
HiruNews
HiruNews
HiruNews
57,109 Views
HiruNews
HiruNews
HiruNews
21,858 Views
HiruNews
HiruNews
HiruNews
47,267 Views
HiruNews
HiruNews
HiruNews
8 Views
HiruNews
HiruNews
HiruNews
106,861 Views
Top