மாத்தறை முதல் அம்பாந்தோட்டை வரையான நிர்மாணப் பணிகளுக்கு 103.2 பில்லியன்

Sunday, 21 April 2019 - 8:41

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+103.2+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின், மாத்தறை முதல் அம்பாந்தோட்டை வரையான 96 கிலோ மீற்றர் வரையான நிர்மாணப் பணிகளுக்காக 103.2 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் தற்போது 80 சதவீதமளவில் நிறைவுசெய்யப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரிய ஆராச்சி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம், குறித்த அதிவேக நெடுஞ்சாலை திறந்துவைக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.