சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு சவுதி அரேபியா நிதியுதவி

Sunday, 21 April 2019 - 20:05

%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF
இரத்தினபுரியில் உள்ள சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு சகல வசதிகளையும் கொண்ட மருத்துவ பீடம் ஒன்றை அமைப்பதற்கான நிதியினை வழங்க சவுதி அரேபியா முன்வந்துள்ளது.

18 கோடியே 75 லட்சம் சவுதி அரேபியா ரியால்களை இலகு கடன் திட்டத்தின் கீழ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்ததிட்டத்தின் மூலம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் மற்றும் அல்லாமல் ஏனைய மாணவர்களும் சிறந்த பலனை பெறுவர் என நிதி அமைச்சினால் விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மருத்துவ வளாகத்தில் உள்ள ஆய்வு கூடங்களில் சர்வதேச தரத்தை கொண்ட நவீன உபகரணங்கள் பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.