Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%21%21
Monday, 22 April 2019 - 11:23
இலங்கை குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய நடிகை ராதிகா!!
8,749

Views
இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பின் போது பிரபல சின்னத்திரை நடிகை  ராதிகா உயிர் தப்பியுள்ளார்.

கொழும்பு – சின்னமன் கிரேன்ட் ஹோட்டலுக்கு வந்திருந்த அவர் அங்கிருந்து வெளியேறிய நிலையில், அங்கு குண்டு வெடித்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

"சின்னமன் கிரேன்ட் ஹோட்டலில் இருந்து வெளியேறிய சில நிமிடங்களில் அங்கு குண்டு வெடித்தது. அதிர்ச்சியளிக்கிறது. இந்த அதிர்ச்சி சம்பவத்தை நம்பமுடியவில்லை. கடவுள் நம்மோடு இருக்கிறார்" என நடிகை ராதிகா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கொழும்பு - கொட்டாஞ்சேனை - கொச்சிக்கடை தேவாலயம் மற்றும் நீர்கொழும்பு - கட்டான - கட்டுவாபிட்டிய தேவாலயம், மற்றும் மட்டக்களப்பு ஸீயோன் தேவாலயம், கொழும்பு சங்ரிலா, கிங்ஸ்பெரி மற்றும் கொள்ளுப்பிட்டியில் உள்ள சினமன் கிரேன்ட் முதலான விருந்தகங்களில் நேற்று காலை 8.45 முதல் 9.30 வரையில் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகின.

பின்னர், 1.45 அளவில், தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு முன்னால் உள்ள உணவகம் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவானது.

குறித்த வெடிப்புச் சம்பவத்தில் இரண்டு பேர் பலியாகினர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தெமட்டகொடயிலும் குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றன.

இதேவேளை, குண்டு வெடிப்பு சம்பவங்களில் இதுவரை 290 பேர் பலியாகியுள்ளதுடன், 500 பேர் வரை காயமடைந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவற்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
258 Views
HiruNews
HiruNews
HiruNews
34,154 Views
HiruNews
HiruNews
HiruNews
14,614 Views
HiruNews
HiruNews
HiruNews
35,737 Views
HiruNews
HiruNews
HiruNews
1,962 Views
HiruNews
HiruNews
HiruNews
83,768 Views
Top