இறக்குமதி பொருட்களின் செலவீனங்கள் வீழ்ச்சி

Monday, 22 April 2019 - 14:07

%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
இறக்குமதி பொருட்களின் செலவீனங்கள் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டின் முதல் 3 மாத கால பகுதியினுள் இந்த வீழ்ச்சி 17.8 சத வீதமாக வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி மற்றும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார கொள்கை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக இடைநிலை பொருட்கள், நுகர்வோர் பொருட்கள் மற்றும் முதலீட்டு பொருட்களின் இறக்குமதி செலவீனங்கள் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இறக்குமதியாளர்கள் பொருளாதார நிலை மேம்பட்டுள்ளது.

இதேபோல, இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்கள் மற்றும் மசகு எண்ணெய் போன்றவற்றின் சராசரி இறக்குமதி விலை குறைவடைந்துள்ளமையும் இறக்குமதி செலவீன வீழ்ச்சிக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.