பல பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான பொதிகள் மற்றும் வாகனங்கள்!! - விசேட சோதனையில் படையினர்

Tuesday, 23 April 2019 - 20:49

%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21%21+-+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D
வெடிப்பொருட்கள் அடங்கிய வேன் ரக வாகனம் மற்றும் பாரவூர்தி தொடர்பிலான தகவல்களை கொழும்பு மாவட்டத்திலுள்ள சகல காவற்துறை நிலையங்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி காவற்துறை மா அதிபரினால் இந்த அறிவுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பல இடங்களில் சந்தேகத்துக்கிடமான பொதிகள் மற்றும் வாகனங்கள் இருப்பதாக காவற்துறைக்கு கிடைக்க பெற்ற தகவல்களுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

கிருலப்பனை - கொலம்பகே மாவத்தையில் சந்தேகத்துக்கிடமான வகையில் பெட்டி ஒன்று இருப்பதாக கிடைக்க பெற்ற தகவல்களுக்கமைய குறித்த பகுதிக்கு காவற்துறை விஷேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் சென்றனர்.

இதன்போது அவர்கள் இந்த பொதியை வெடிக்க வைத்துள்ளனர்.

இதேவேளை, கொழும்பு - கிங்ஸ்பெரி விருந்தகத்திற்கு அருகாமையில் சந்தேகத்துக்கிடமான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளி ஒன்றை காவற்துறை விஷேட அதிரடிப்படையினர் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, அதன் உரிமையாளர் தனது ஆள் அடையாளங்களை உறுதிப்படுத்தியதை அடுத்து அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

அத்துடன் லிந்துலை - ராணிவத்தை பிரதேசத்தில் ஆள் அடையாளத்தை உறுதிப்பத்த தவறிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 28 வயதான குருநாகல் பகுதியை சேர்ந்தவர் என்றும் அவரது கணவன் கொச்சிக்கடை பகுதியை சேர்ந்தவர் என்றும் ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த பெண்; கடந்த 12 ஆம் திகதி வத்தளை பிரதேசத்தில் தங்கிருந்தமைக்கான பற்று சீட்டுக்களை வைத்திருந்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவரது கையடக்க தொலைபேசியில் இருந்து கத்தோலிக்க பாடல்கள் பாடும் புகைப்படங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ரத்மலான 4ம் ஒழுங்கையில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றிய 13 முஸ்லிம் இளைஞர்கள் கடந்த 21 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதற்கமைய ரத்மலானை வான்படை அதிகாரிகள் மற்றும் கல்கிசை காவற்துறையினர் இணைந்து அந்த உணவகத்தை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதனிடையே, கொழும்பு நவம் மாவத்தையில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றுக்கு அருகாமையில் சந்தேகத்துக்கிடமான பொதி ஒன்று இருப்பதாக காவற்துறைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அந்த பகுதியில் காவற்துறை விஷேட அதிரடிப்படையினர் தேடுதல்களை நடத்தினர்.