Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%87+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%21+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87%21%21
Thursday, 25 April 2019 - 18:00
இவர்கள் தொடர்பில் அறிந்தால் உடனே அழையுங்கள்..! புகைப்படங்கள் உள்ளே!!
116,647

Views
கடந்த தினம் இடம்பெற்று குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்படைய சந்தேகநபர்களை அடையாளம் காண காவற்துறையினர் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

இதற்காக 3 பெண்கள் உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்களின் படங்களை காவற்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

அப்துல் காதர் பாதிமா காதியா - பாதிமா லத்தீஃப், புலஸ்தீனி ராஜேந்திரன் என்ற சாரா இரண்டு பேரும் பெண் சந்தேக நபர்களாவர்.

அவர்களில் அப்துல் காதர் ஃபாத்திமா காதியா, சங்கிரிலா விருந்தகத்தில் தாக்குதல் நடத்திய சந்தேகநபர்கள் இருவரில் ஒருவர் என்று கருதப்படும்,தேசிய தௌகீத் ஜமாத் இயக்கத்தின் தலைவர் சஹ்ரான் ஹசீமின் மனைவி என்று குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

புலஸ்தீனி ராஜேந்திரன் என்ற சாரா, நீர்கொழும்பு - கட்டுவாப்பட்டிய புனிய செபஸ்தியன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய சந்தேக நபரின் மனைவியாவார்.

ஏனைய சந்தேகநபர்களில், சஹரான் ஹசீமின் சகோதரரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மாவனெல்லை பிரதேசத்தில் புத்தர் சிலை ஒன்றை உடைத்தமை மற்றும் வனாத்துவில்லு பிரதேசத்தில் அதி வலுகொண்ட வெடிப்பொருட்களை வைத்திருந்தமை போன்ற சம்பவங்களுடன் தொடர்புடையவர்களாவர்.

அவர்கள் குறித்த விபரங்களை

071 859 1771'

0112 422 176

0112 395 605 ஆகிய இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு காவற்துறை கோரிக்கை விடுத்துள்ளது.





  • மொஹமட் இவுஹயிம் சாதிக் அப்துல்ஹக் (படம் - 1)
  • பாதிமா லத்தீஃப் (படம் - 2)

  • மொஹமட் இவுஹயிம் சாஹிட் அப்துல்ஹக் (படம் - 3)
  • புலஸ்தினி ராஜேந்திரன் எனும் சாரா (படம் - 4)
  • அப்துல் காதர் பாதிமா காதியா (படம் - 5)
  • மொஹமட் காசிம் மொஹமட் ரில்வான் (படம் - 6)






 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
3,161 Views
HiruNews
HiruNews
HiruNews
56,579 Views
HiruNews
HiruNews
HiruNews
21,687 Views
HiruNews
HiruNews
HiruNews
47,024 Views
HiruNews
HiruNews
HiruNews
1,320 Views
HiruNews
HiruNews
HiruNews
106,305 Views
Top