Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 15 May 2019 - 16:23
வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹாவிலும் மீண்டும் ஊரடங்கு சட்டம்
15,401

Views
வடமேல் மாகாணத்தின் சகல காவற்துறைப் பிரிவுகளுக்கும், கம்பஹா காவற்துறைப் பிரிவுக்கும் இன்று மாலை 7 மணிமுதல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.

காவற்துறை ஊடகப்பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த ஊரடங்கு உத்தரவு நாளை காலை 4 மணி வரையில் அந்த பிரதேசங்களில் அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த தினங்களில் வடமேல் மாகாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் 78 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் அரச பணியாளர்களும் உள்ளடங்குகின்றனர்.

அவர்கள் பணியாற்றுகின்ற அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு, குறித்த நபர்கள் வன்முறைகளுடன் தொடர்பு கொண்டமைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை கடிதம் மூலம் அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காவற்துறை ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார்.

இதேநேரம், வன்முறைச் சம்பவம் தொடர்பில் நிகவரட்டிய பகுதியில் நேற்று கைது செய்யப்பட்ட 12 பேரும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார குற்ற புலனாய்வு திணைக்களத்தின் தடுப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் சில பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

முறைபாடு ஒன்றை வழங்க வரகாபொல காவல்நிலையத்திற்கு சென்ற நிலையில், அவரை காவற்துறை விசேட விசாரணை பிரிவினர் கைது செய்தனர்.

இதேவேளை, கடந்த தினங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட மஹாசோன் படையணியின் பிரதானி அமித் வீரசிங்க எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட புதிய சிங்கலே தேசிய அமைப்பின் தலைவர் டேன் பிரியசாத், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வடமேல் மாகாணத்திலும், கம்ஹா காவற்துறைப் பிரிவிலும் அமைதியை நிலைநாட்டுவதற்காக 5 ஆயிரத்து 500க்கும் அதிகமான காவற்துறை அலுவலர்களை ஈடுபடுத்த நேர்ந்ததாகவும் காவற்துறை ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த மாதம் 21ம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக இதுவரையில் 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 10 பேர் பெண்களாவர்.

கைதானவர்களில் 65 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவிலும், 20 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவிலும் உள்ளன.

இந்த தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியவர் பயன்படுத்திய சிற்றூர்ந்தை கொள்வனவு செய்த ஒருவர் புதிய காத்தான்குடியில் கைதானார்.

காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

மொஹமட் ஆதம் என்ற அவரே, குறித்த சிற்றூர்ந்தின் ஆசனங்களையும் தயாரித்து பொருத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை தற்கொலை தாக்குதல்தாரிகள் பயன்படுத்திய 17 வீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய, பாணந்துறை சரிக்காமுல்ல, கொழும்பு 3 புனித அந்தோனியார் வீதி, கல்கிஸ்ஸை டெம்லர்ஸ் வீதி, வத்தளை - எண்டேரமுல்லை, வனாத்துவில்லு, கொழும்பு 6- மயூரா பிரதேசம், சாய்ந்தமருது, திஹாரிய முதலான இடங்களில் அவர்கள் தங்கி இருந்த வீடுகள் உள்ளன.

அத்துடன், கொச்சிக்கடை - தலுகொட்டுவ, வாழைச்சேனை - ரிதீயேதென்ன, சுபாரத்திபுர - குளியாப்பிட்டிய, ஹெட்டிபொல, கட்டுபொலத்த, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை என்ற 17 இடங்களில் அவர்கள் தங்கி இருந்த வீடுகள் உள்ளன.

அதேநேரம் அவர்கள் நுவரெலியா, வானத்துவில்லு, காத்தான்குடி, வழைச்சேனை, கண்டி அருப்பொல, அம்பாந்தொட்டை மற்றும் மல்வானை ஆகிய 7 இடங்களில் பயிற்சிமுகாம்களை நடத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
258 Views
HiruNews
HiruNews
HiruNews
34,154 Views
HiruNews
HiruNews
HiruNews
14,614 Views
HiruNews
HiruNews
HiruNews
35,737 Views
HiruNews
HiruNews
HiruNews
1,962 Views
HiruNews
HiruNews
HiruNews
83,768 Views
Top