Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+92+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
Wednesday, 15 May 2019 - 19:02
இதுவரை 92 தான சாலைகள் மாத்திரமே பதிவு
1,910

Views
விசாகப் பூரணை தினத்தை முன்னிட்டு இதுவரை 92 தான சாலைகள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் செயலாளர் மஹேந்ர ஒபேசேகர இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த வருடம் நாடுமுழுவதும் சுமார் 6 ஆயிரம் தான சாலைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளுக்கு மத்தியில் இம்முறை அந்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்களின் அடிப்படையில், சோறு உள்ளிட்ட விசேட உணவுகள் வழங்குவதை தவிர்ந்த குளிர்கழி முதலான பொருட்களை வழங்கும் தான சாலை முன்னெடுப்பது தொடர்பிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, பொதுமக்கள் நீண்ட நேரம் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையில், தான சாலைகளை நடத்துவதற்கு இதுவரை பதிவுகளுக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹேந்ர ஒபேசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விசாகப் பூரணை தினத்தை முன்னிட்டு, நாடுமுழுவதிலும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நான்கு தினங்களுக்கு மூடப்பட உள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரான பிரதி மதுவரி ஆணையாளர் கபில குமாரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 20 திகதிவரை அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,312 Views
HiruNews
HiruNews
HiruNews
55,887 Views
HiruNews
HiruNews
HiruNews
21,456 Views
HiruNews
HiruNews
HiruNews
46,692 Views
HiruNews
HiruNews
HiruNews
1,194 Views
HiruNews
HiruNews
HiruNews
105,605 Views
Top