Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 16 May 2019 - 7:57
இன்று அதிகாலை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம்
3,906

Views
வடமேல் மாகாணத்தின் சகல காவற்துறைப் பிரிவுகளுக்கும், கம்பஹா காவற்துறைப் பிரிவுக்கும் நேற்று மாலை 7 மணிமுதல் அமுலாக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 4 மணியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த தினங்களில் வடமேல் மாகாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் 78 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் அரச பணியாளர்களும் உள்ளடங்குகின்றனர்.
 
குறித்த நபர்கள் வன்முறைகளுடன் தொடர்பு கொண்டமைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை, அவர்கள் பணியாற்றுகின்ற அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காவற்துறை ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார்.

வடமேல் மாகாணத்திலும், கம்ஹா காவற்துறைப் பிரிவிலும் அமைதியை நிலைநாட்டுவதற்காக 5 ஆயிரத்து 500க்கும் அதிகமான காவற்துறை அலுவலர்களை ஈடுபடுத்த நேர்ந்ததாகவும் காவற்துறை ஊடகப்பேச்சாளர் நேற்றுத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த மாதம் 21ம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக இது வரையில் 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 10 பேர் பெண்களாவர்.

கைதானவர்களில் 65 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவிலும், 20 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவிலும் உள்ளனர்.
 
இந்த தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
258 Views
HiruNews
HiruNews
HiruNews
34,154 Views
HiruNews
HiruNews
HiruNews
14,614 Views
HiruNews
HiruNews
HiruNews
35,737 Views
HiruNews
HiruNews
HiruNews
1,962 Views
HiruNews
HiruNews
HiruNews
83,768 Views
Top