Hirunews Logo
+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%2C+6+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
Thursday, 16 May 2019 - 9:23
பங்களாதேஷ் அணி, 6 விக்கட்டுக்களினால் வெற்றி
68

Views
அயர்லாந்து அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற ஒருநாள் கிரிக்கட் போட்டியில் பங்களாதேஷ் அணி, 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது.

டப்ளினில் நேற்று இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 292 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 293 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய பங்களாதேஷ் அணி, 43 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்த நிலையில், வெற்றி இலக்கை கடந்தது.

இதேவேளை, பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி தாமதமாக பந்து வீசியமை காரணமாக, அந்த அணியின் தலைவர் இயன் மோர்கனுக்கு ஒரு போட்டியில் விளையாட சர்வதேச கிரிக்கட் பேரவை தடைவிதித்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடர் இடம்பெற்று வருகின்றது.

3ஆவது ஒருநாள் போட்டி பிரிஸ்டோலில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

இதன்போது இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் தாமதமாக பந்துவீசியமையின் காரணமாக அணித் தலைவர் மோர்கனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இயன் மோர்கனுக்கு 40 சதவீதம் அபராதமும், அணியின் ஏனைய வீரர்களுக்கு தலா 10 சதவீதம் அபாரதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானுடன் நாளைய தினம் இடம்பெறவுள்ள 4ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இயன் மோர்கன் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
258 Views
HiruNews
HiruNews
HiruNews
34,154 Views
HiruNews
HiruNews
HiruNews
14,614 Views
HiruNews
HiruNews
HiruNews
35,737 Views
HiruNews
HiruNews
HiruNews
1,962 Views
HiruNews
HiruNews
HiruNews
83,768 Views
Top